Advertisment

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை!

CORONAVIRUS PREVENTION TAMILNADU CM MKSTALIN DISCUSSION

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் மே 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் (22/05/2021) காலை 11.30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்ட அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டகுழு பங்கேற்கிறது.

Advertisment

இதில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisment

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மே மாதம் இறுதி வாரத்தில் கரோனா பாதிப்பு தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

meetings chief minister prevention coronavirus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe