“கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள்...” - தமிழக முதல்வர்!

Tamilnadu CM Mk Stalin says about Certificates distributed by Sekar Babu

அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 11 பெண்கள் உள்பட 115 மாணவர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார். 2023 2024 ஆம் கல்வியாண்டில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த 11 பெண்கள் உள்பட 97 மாணவர்கள், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் மூன்றாண்டு ஓதுவார் பயிற்சி முடித்த 9 மாணவர்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 9 மாணவர்கள் என ஆக மொத்தம் 115 மாணவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார்.

இதனை மேற்கோள்காட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம்! கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்! கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள்.

நுழைவோம் என்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம். பயிற்சிப் பள்ளிகள் துவங்கினோம்! பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருக்கிறார்கள். திராவிடம் மகிழ்கிறது! இவர்களைத் தடுக்க ஏற்படுத்தப்படும் அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

certificates priest
இதையும் படியுங்கள்
Subscribe