‘முப்பாலில் முக்காலமும் உணர்த்திய தெய்வப்புலவர்’ முதல்வர் பழனிசாமி

Tamilnadu CM Edappadipalanisamy wishes for thiruvalluvar day

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளுவர்தினத்திற்குத்தனதுடிவிட்டர்பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனதுடிவிட்டர்பக்கத்தில், ‘முப்பாலில் முக்காலமும் உணர்த்தியதெய்வப்புலவர். உலகிற்கானபொதுமறையைத்தந்துதாய்த்தமிழின்அருமையை உலகிற்கு உணர்த்திய ஒப்பற்றமுதற்பாவலரானதிருவள்ளுவர் பெருந்தகையின் தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்’எனப்பதிவிட்டுள்ளார்.

மேலும் மாட்டுப்பொங்கல் வாழ்த்தினையும் தனதுடிவிட்டர்பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, ‘உழவனின் உற்ற நண்பனாய், நம்தாய்த்தமிழ்மக்களின் வாழ்வியலில் இரண்டற கலந்து தூய அன்பினை என்றும் பகிரும் கால்நடைகளுக்கான இந்த மாட்டுப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும், உழவர் மகிழட்டும் என என்வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Subscribe