இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப்பரவி வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது அரசுக்குச் சவாலாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விடுமுறையில் சென்றிருந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.