Advertisment

"நெருக்கடியிலிருந்து மீண்டு தமிழகத்தை மீட்டு உருவாக்குவோம்"- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

Tamilnadu CM edappadi palanisamy tweet about TN economy

இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய போதிலும், தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மத்திய, மாநில அரசுகளுக்குச் சவாலாக உள்ளது.

Advertisment

Tamilnadu CM edappadi palanisamy tweet about TN economy

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவுதற்காக ஏற்கனவே உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழ்நாட்டில் அடித்தளத்தைக் கட்டமைப்பதற்காகவும் நிறுவனங்களை ஈர்ப்பதற்காகவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சியை நோக்கிய பாதையில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் முதற்கட்ட நடவடிக்கைதான். தமிழக மக்கள் எத்தகைய சூழலிலும் மீண்டெழும் தன்மை கொண்டவர்கள். இந்த நெருக்கடியிலிருந்தும் மீண்டு நமது மாநிலத்தை மீட்டு உருவாக்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

economy tamilnadu lockdown covid 19 corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe