Advertisment

ரஜினி என்ன அரசியல் கட்சித்தலைவரா?- முதல்வர் பேட்டி!

கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுசெய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

Advertisment

கேள்வி: கூட்டணி தொடருமா? உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி?

பதில்: நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் தொடரும். அதே கூட்டணியுடன் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து மாமல்லப்புரத்தை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisment

TAMILNADU CM EDAPPADI PALANISAMY PRESS MEET COIMBATORE AIRPORT

கேள்வி: தொடர்ந்து ஆளுமை மிக்க தலைவர்களுக்கு தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது சொல்லுவது ஏன்?

பதில்: தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என்பது இடைத்தேர்தலில் நிரூபணமாகியுள்ளது. ரஜினி என்ன அரசியல் கட்சித் தலைவரா? அவர் ஒரு நடிகர்? வெற்றிடம் என தொடர்ந்து அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என யார் சொன்னது?

கேள்வி: அமமுகவின் புகழேந்தி அதிமுகவில் வந்தால் ஏற்று கொள்வீர்களா?

பதில்: அதிமுகவில் இணைவது குறித்து புகழேந்தி கடிதம் கொடுத்தால் தலைமை கழக நிர்வாகிகள் பரிசீலித்து முடிவு எடுப்பார்கள்.

Speech airport Coimbatore cm edappadi palanisamy Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe