Advertisment

இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர்!

TAMILNADU CM EDAPPADI PALANISWAMI PRESSMEET TODAY

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110- ன் கீழ் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், தங்க நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (26/02/2021) மதியம் 02.30 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.

Advertisment

இன்று (26/02/2021) மாலை 04.30 மணிக்கு, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ள நிலையில், தமிழக முதல்வரின் செய்தியாளர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Advertisment

செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது தலைமையிலான அரசு செய்த மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், மேலும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

pressmeet cm edappadi palanisamy Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe