தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (02/10/2019)மாமல்லபுரம் செல்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை இந்திய மற்றும் சீன நாட்டின் உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.

tamilnadu cm arrive mamallapuram in tomorrow india and china leaders meet

Advertisment

அதன் தொடர்ச்சியாக நாளை மாமல்லபுரம் செல்லும் தமிழக முதல்வர், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் ஆலோசனை செய்யவுள்ளார். இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் துப்பாக்கி வைத்துள்ள நபர்கள், தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் இடையேயான சந்திப்பு நடைபெற உள்ளதையடுத்து காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.