Published on 13/05/2021 | Edited on 13/05/2021

தமிழகத்தில் புதிய சாலைகள் போடுவது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும். மேற்பரப்பைச் சுரண்டிவிட்டு சாலை போடுவது வீடுகளுக்குள் நீர் புகாமல் தடுக்கும். எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சாலைகள் போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை" என்று அறிவுறுத்தியுள்ளார்.