"கரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை"- தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி!

tamilnadu chief secretary pressmeet at coimbatore

கரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், "கரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். கரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 3% ஆகவும், கோவையில் 5% ஆகவும் உள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றினால் கரோனா பரவலைப் பெருவாரியாக குறைக்கலாம். அடுத்த 20 நாட்கள் சவாலானதாக இருக்கும்; தொற்று குறைந்தால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் தரப்படும்". இவ்வாறு தலைமைச் செயலாளர் கூறினார்.

Chief Secretary Coimbatore pressmeet
இதையும் படியுங்கள்
Subscribe