/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shan3.jpg)
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, 2021- ஆம் ஆண்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை கே.சண்முகத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இம்மாத இறுதியில் கே.சண்முகத்தின் பதவிக்காலம் முடியவிருந்த நிலையில், பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய பணியாளர் நிர்வாகத் துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 13- ஆம் தேதி தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)