/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/csok12.jpg)
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதும், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக்கடந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று (22/04/2021) காலை 11.00 மணிக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய 11 ஒருங்கிணைப்பு குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)