கணேஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துக்கள் கொண்டு திருவள்ளூர் ஓவியத்தை வரைந்திருந்தார். மேலும், தனது ஓவியத்தை ட்விட்டர் வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கும் அவர் டேக் செய்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த படத்தைப் பகிர்ந்து, ""அன்பின் வழியது உயிர்நிலை" என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்!" எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.