

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150- வது பிறந்தநாளையொட்டி, சென்னை, இராஜாஜி சாலை, துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி.யின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கைக் குறிப்பு மடிப்பேடுகளை முதலமைச்சர் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜயா ராணி, சென்னை துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.