Advertisment

16- வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், அங்குள்ள பூங்காவில் அமர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.