தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13/09/2021) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ள தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது முதலமைச்சருடன், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.