tamilnadu chief minister mkstalin meet governor at chennai

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (09/06/2021) மாலை 05.00 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

கரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி போடும் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் முதல்வர் பேசியதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ஆளுநருடனான முதல்வர் சந்திப்பின் போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.