பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

TAMILNADU Chief Minister MK Stalin's condolences!

அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் உமையாள் ராமநாதன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கொடை வள்ளல் டாக்டர் KV.AL.RM. அழகப்பச் செட்டியாரின் புதல்வியும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான டாக்டர் உமையாள் ராமநாதன் திடீரென மறைவெய்தினார் என்ற துயரச் செய்திக் கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காகத் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் அர்ப்பணித்துள்ள குடும்பத்தின் வழித்தோன்றலான உமையாள் ராமநாதன், பெண்களின் கல்வி முன்னேற்றத்திலும், சமூகத் தொண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார். கல்வி நிறுவனங்கள் மூலம் புதிய தலைமுறையை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்த அவரது திடீர் மறைவு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

condolence Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe