coronavirus vaccines tamilnadu chief minister mkstalin wrotes letter for union health minister

Advertisment

தமிழகத்திற்குப் போதிய தடுப்பூசிகள் வழங்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மத்திய அரசிடமிருந்து போதிய அளவில் தடுப்பூசிகள் வரப்பெறவில்லை. தமிழக மக்கள் தொகை, கரோனா பாதிப்புக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். மத்திய அரசு மூலமும், பிற வழிகள் மூலம் தலா 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மத்திய அரசு மூலம் 25.84 லட்சம் தடுப்பூசியும் பிற வழிகள் மூலம் 16.74 லட்சம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.