Advertisment

தடுப்பூசி மையத்தைக் குத்தகைக்கு தர முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

tamilnadu chief minister mkstalin wrote a letter for prime minister narendra modi

Advertisment

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு குத்தகைக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் கடிதத்தில், "செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு குத்தகைக்கு வழங்க வேண்டும். முழு சுதந்திரத்துடன் தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். தமிழக அரசுக்கு குத்தகைக்கு அளித்தால் உடனடியாக தடுப்பூசி தயாரிப்பு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இரு நாட்களுக்கு முன்னர் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள தடுப்பூசி மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

chief minister Narendra Modi prime minister
இதையும் படியுங்கள்
Subscribe