Advertisment

"உலகத் தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குவீர்" - முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!

coronavirus relief funds tamilnadu chief minister mk stalin video tweets

Advertisment

கரோனா தடுப்புப் பணிக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நிதி வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "உலகத் தமிழர்களே உயிர் காக்கநிதி வழங்குங்கள். மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடி என இரண்டு நெருக்கடியைத்தமிழகம் தற்போது எதிர்கொண்டு வருகிறது. கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள், மருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தத்தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Advertisment

மக்கள் வழங்கும் நிதி கரோனாதடுப்புப்பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மக்கள் தங்களைத்தாங்களே காக்கும் பணியில் முன்வந்து ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் அளிக்கும் நிதி கரோனாவைமுற்றிலும் ஒழிக்க உதவிகரமாகஇருக்கும். மக்கள் வழங்கும் நிதிக்குவருமான வரி விலக்கு அளிக்கப்படும். கரோனாதொற்றில் இருந்து மக்கள் விடுபட உதவிக்கரம் நீட்டுங்கள். தனக்காக மட்டும் வாழாமல், ஊருக்காக, உலகத்துக்காக வாழும் உங்கள் முன்னெடுப்புக்குநன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

chief minister coronavirus funds Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe