tamilnadu chief minister mkstalin thanks to peoples

Advertisment

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மு.க. ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின்முகப்பில் தமிழக முதலமைச்சர் என்றும், திமுகதலைவர் என்றும் மாற்றப்பட்டிருந்தது. 'இனித் தமிழகம் வெல்லும்' எனவும் ட்விட்டர் முகப்புப் பக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.