Advertisment

"வேளாண்மைதான் நாட்டுக்கு உயிர், உடல்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு...

tamilnadu chief minister mkstalin speech

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற 'காலநிலை மாற்றம் மற்றும் கரோனா தொற்று நோயின் பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்தல்' குறித்த பன்னாட்டு மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (06/08/2021) காலை 11.00 மணியளவில் தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்த மாநாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன தலைவர் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், தலைவர் முனைவர். மதுரா சுவாமிநாதன், நிர்வாக இயக்குநர் முனைவர் கே.எஸ். முரளி, தி இந்து குழுமத்தின் தலைவர் ராம், சூழியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் முனைவர் ரெங்கா லச்சுமி, இணைய வழியாக உலக உணவுத் திட்டம் - காலநிலை பேரழிவு அபாயக் குறைப்பு திட்ட தலைவர் ஜெர்னாட் லகாண்டா, International Crops Research Institute For The Semi- Arid Tropics நிர்வாக இயக்குநர் முனைவர் ஜாக்குலின் டி. அரோஸ் ஹியூஸ், உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

vm

மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று வேளாண்துறைக்குத் தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண்துறை என்பதை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டுக்கு உயிராகவும், உடலாகவும் உள்ள வேளாண்மை துறைக்குத் தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் தருகிறது. எம்.எஸ். சுவாமிநாதனின் ஆலோசனைகளைச் செயல்படுத்தியவர் கலைஞர். விவசாயத்திற்கு திமுகதலைமையிலான அரசு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. பசிப்பிணி ஒழிப்பை இலக்காகக் கொண்டு எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் செயல்பட்டுவருகிறது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. வேளாண்மையை லாபகரமான சூழலாக விவசாயிகள் நினைக்கும் வகையில் மாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Speech chief minister Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe