செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

coronavirus vaccine production tamilnadu chief minister mkstalin discussion

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் HLL Biotech நிறுவனத்தின் VaccineLab இல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (25/05/2021) நேரில் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது, HLL Biotech நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விஜயன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.ஜான் லூயிஸ் இ.ஆ.ப., அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது பற்றி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

chief minister coronavirus vaccine discussion Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe