Advertisment

சப்பரத் திருவிழாவில் ஒருவர் உயிரிழப்பு- ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு! 

TAMILNADU CHIEF MINISTER MIKSTALIN ANNOUNCED THE FUNDS

Advertisment

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30/04/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டாங்குடியில் இன்று (30/04/2022) அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது, அதிலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த திருக்கண்ணப்புரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் தீபன்ராஜ் மீது சக்கரம் ஏறியதால் பலத்த காயமடைந்துள்ளார். அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை எடுத்தும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் 5 லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

condolence Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe