தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக ஆளுநருடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2 மாதங்களில் தற்போது மூன்றாவது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக ஆளுநரை சந்திக்கிறார்.தற்பொழுது நடைபெறும் இந்த சந்திப்பில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,மருத்துவதுறை செயலாளர் பீலா ராஜேஷ், தலைமைசெயலாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருக்கின்றனர்.