Advertisment

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

TAMILNADU CHIEF MINISTER ARRIVED IN DELHI

Advertisment

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று (18/07/2021) மாலை சென்னை விமான நிலையம் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.

டெல்லி விமான நிலையம் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து, நாளை (19/07/2021) டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக குடியரசுத் தலைவரைச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அதேபோல், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ளார்.

airport chief minister Delhi Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe