Published on 20/02/2021 | Edited on 20/02/2021

சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, மாவட்ட எஸ்.பி. அபிநவ் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "தமிழகம் முழுவதும் 7,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலின் போது தமிழகத்தில் பாதுகாப்புப் பணிகள் சிறப்பாக இருக்கும். பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் தான் அமைதியான முறையில் தேர்தல் நடக்கிறது. 1,000- க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்படும்" என்றார்.