அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொளியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் காணொளி மூலம் நடைபெற்று வரும் ஆலோசனையில், வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.