Skip to main content

‘சிறைக்குள் நடப்பதை மீடியாக்களிடம் சொன்னால் நடவடிக்கை பாயும்!’- ஏ.டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

“ரொம்ப கஷ்டம்தான்.. இனி மீடியா நண்பர்கள்கிட்ட பேசுறது கொஞ்சம் ரிஸ்க்தான்.” என்று சலித்துக்கொண்டார் அந்த சிறைத்துறை சோர்ஸ். “விஷயத்தைச் சொல்லுங்க..” என்று நாம் கேட்பதும், அவர் தயங்குவதும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால், இந்த தடவை தன் உதடுகளின் மீது விரல் வைத்து   ‘நான் பேசவே கூடாது‘என்பதை ’சிம்பாலிக்’ஆகச் சொன்னார். 
 

அவர் பேச மறுத்ததற்கான காரணம் இதுதான்- 
 

கடந்த 11-ஆம் தேதி சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் சிறைத்துறை துணைத்தலைவர்கள், சிறை கண்காணிப்பாளர்களின் மாதாந்திர கூட்டம் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் முன்னிலையில் நடந்தது. அந்த நிகழ்ச்சி பதிவை இணைத்து, அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய அறிக்கையை வரும் 25- ஆம் தேதிக்குள் சமர்ப்பித்திட வேண்டுமென, கூடுதல் காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து, அனைத்து சரக சிறைத்துறை துணைத் தலைவர்கள், தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளர் மற்றும் சிறை கண்காணிப்பாளர்களுக்கு 20-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

tamilnadu central jails adgp circular issued


சுட்டிக்காட்டப்பட்ட அந்த 37 கருத்துக்களில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள ‘வேலூர் சிறைத்துறை எஸ்.பி. உரிய நேரத்தில் அலுவலகம் வரவேண்டும். வழக்கமான வேலைகளில் சரியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.’என்று அறிவுறுத்தியிருப்பதெல்லாம் ரெகுலர் சமாச்சாரம்தான். அந்த 7-வது கருத்துதான் நமது சோர்ஸை சில வினாடிகள் வாயடைக்கச் செய்துவிட்டது. அதில் அப்படியென்ன இருக்கிறது?
 

’சமீப காலமாக, வார்டர்கள் ஊடகங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, சிறைச்சாலைகள் குறித்த விபரங்களை அளித்துவருவதாக அறியப்படுகிறது. தவறான செய்திகளை ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களுக்கு தருகின்ற வார்டர்கள் யார் என்பதை,  சிறைச்சாலைகள் டி.ஐ.ஜி. மற்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் விசாரித்தறிந்து எச்சரிக்க வேண்டும். அந்த வார்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மெற்கொள்ள வேண்டும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

“இதற்கு என்ன அர்த்தம்?”என்று கேட்டுவிட்டு “சிறையில் என்ன நடந்தாலும் அது வெளியே தெரியக்கூடாது என்றுதானே சொல்ல வருகிறார்கள் மேலதிகாரிகள்..”என பதிலையும் சொன்ன அந்த சோர்ஸ் “எதற்காக நாங்கள் தவறான செய்திகளை ஊடகங்களுக்குத் தரவேண்டும்? சிறைக்குள் நடக்கின்ற தவறுகளைத்தானே உள்ளுக்குள்ளே அடக்கி வைக்க முடியாமல் வெளிப்படுத்துகிறோம். அதுவும்கூட, இதுபோன்ற தவறுகள் சிறையில் நடக்கவே கூடாது  என்ற நல்லெண்ணத்தில்தானே பகிர்கிறோம்.” என்று ஆதங்கப்பட்டார். 

tamilnadu central jails adgp circular issued


மேலும் அவர் “சிறைக்குள் நடக்கின்ற குற்றச்செயல் எதுவும் லீக் ஆகவே கூடாது என்கிறார்களே! அது என்ன ராணுவ ரகசியமா? தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயமா? சில அதிகாரிகள் கைதிகள் சிலருடன் கூட்டு சேர்ந்து சிறைவிதிகளை காற்றில் பறக்க விடுகிறார்கள். கஞ்சா, செல்போன், போதைப்பொருட்கள், கத்தி போன்ற ஆயுதங்களெல்லாம் கைதிகளிடம் எப்படி வந்து சேர்கிறது? சோதனை என்ற பெயரில் கைதிகளிடம் பறிமுதல் செய்யப்படும் அத்தனையுமா கணக்கில் காட்டப்படுகிறது? அக்கிரமம் செய்பவர்கள் பலர் இருந்தாலும், நேர்மையுடன் வாழ்பவர்கள் சிலர் இருக்கத்தானே செய்வார்கள்?‘நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்..’என்கிறார் பாரதி.‘அநீதி கண்டு கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி எழுவாயானால் நாம் இருவரும் தோழர்கள்..’எனச் சொல்கிறார் சேகுவேரா. பாரதியையும் சேகுவேராவையும் படித்துவிட்டு சும்மா இருந்துவிட முடியுமா?” என்று நெஞ்சு நிமிர்த்திக் கேட்டபோது,  அந்த சோர்ஸுக்கு ‘சல்யூட்’ வைத்தோம்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.