தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணியாளர்கள் அனைவரும் நாளை (03/08/2022) தவறாமல் பணிக்கு வரவேண்டும் என்று போக்குவரத்துத்துறைகூறியுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் என்பதால், அன்றைய தினம் பணியாளர்கள் யாருக்கும் விடுப்பு கிடையாது என்றும், பணிக்கு வரவில்லை எனில் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறைக் கூறியுள்ளது.
மேலும், போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.