Skip to main content

தொடங்கியது தமிழக பட்ஜெட் தாக்கல்!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

பிப்ரவரி 14 ஆம் தேதி (இன்று) தாக்கலாக இருக்கிறது 2020 -21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்.  

2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை (இன்று)  காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். 

 

Budget to be filed in just time

 

தற்பொழுது தமிழக நிதியமைச்சர் ஓபிஎஸ் தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ள நிலையில் தற்போது பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவையில் 10 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ். 15 ஆவது சட்டப்பேரவையில் அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் முக்கிய அறிவிப்புகள்,புதிய திட்டங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்