தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.நாராயணன் வெளியிட்டள்ள அறிவிப்பில்,
பெரியார் ஈ.வெ.ரா சிலை பற்றி பொறுப்பற்ற முறையில் எச்.ராஜா கருத்து தெரிவித்திருப்பதனை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. எதிர்காலத்தில் இது போன்ற பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவிப்பதனை அவர் தவிர்த்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்துகின்றது. இவ்வாறு கூறியுள்ளார்.