தமிழகம் முழுதும் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி அனுமதி வழங்க கோரி மதுரையில் 300க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கையில் வேல் ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியில் "தமிழ் கடவுள் முருகனுக்கு வேல் ஏந்தி செல்ல தடையா" என்கிற கோஷத்துடன் பேரணி நடைபெற்றது.
பாஜகவின் பேரணியை அடுத்து 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேரணியின் முடிவில் பா.ஜ.க.வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.