Advertisment

கண்ணீர் விட்டு அழுத தமிழிசை!

இந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 351 இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது.தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.இந்த நிலையில் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.அதில் "நேற்று இரவு என் கண்களில் கண்ணீர் தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல.

Advertisment

Advertisment

ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவில் எங்கள் அமைச்சரின் பேட்டியை கேட்டதும் ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியத்தைக்கேட்டதும் ஆனந்தக்கண்ணீர்" என்று ட்வீட் செய்துள்ளார்.மேலும் தமிழகத்தில் பாஜக தலைமையில் மாற்றம் ஏற்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

loksabha election2019 twitter thamilisai savundararajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe