Advertisment

"வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல, ஒரு கன்னத்தில் அறைந்தால்...."- அண்ணாமலை பேட்டி!

tamilnadu bjp leader pressmeet at chennai on april 14th

Advertisment

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (14/04/2022) மாலை 04.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, "ஆளுநரின் தேநீர் விருந்தை தி.மு.க. உள்ளிட்டக் கட்சிகள் புறக்கணிப்பதால் செலவு மிச்சமாகும். அம்பேத்கரின் கொள்கைகளை வைத்து இங்கே அதற்கு நேர் எதிராக அரசியல் செய்து வருகின்றனர். வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை அன்புக்காக மட்டுமே பா.ஜ.க. காட்டும் அம்பேத்கரின் சித்தாந்த வாரிசாக பா.ஜ.க. செயல்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் எங்களது கொள்கைகளைப் பார்த்து எதிர்காலத்தில் பா.ஜ.க.வில் இணைவார்கள்.

அண்ணல் அம்பேத்கரை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. நோக்கம். அம்பேத்கர் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட முக்கியமான ஐந்து இடங்களைபா.ஜ.க. கொண்டாடி வருகிறது. தவறான வழிக்காட்டுதல்களால் பா.ஜ.க. தொண்டர்கள் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்" என்றார்.

Chennai pressmeet Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe