Skip to main content

'வரும் காலம் பா.ஜ.க.வின் காலம்; நீங்கள் நினைப்பது போல் தமிழகம் இப்போது இல்லை' -பா.ஜ.க தலைவர் முருகன் பேச்சு!

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

tamilnadu bjp leader murugan speech

 

தமிழக பா.ஜ.க செயற்குழு கூட்டம் இன்று தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் எல்.முருகன், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தமிழக பாஜக தயாராக உள்ளது. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். வருகின்ற காலம் பா.ஜ.க.வின் காலம். வருங்கால தமிழக அரசியலை பா.ஜ.க நிர்ணயிக்கவுள்ளது. கரோனாவை கையாண்டதில் உலகிற்கு எடுத்துக்காட்டாக மோடி திகழ்கிறார். கரோனா காலத்தில் மக்களுக்காக பணியாற்றிவரும் மத்திய, மாநில அரசுகளைக் குறை கூறுவதையே ஸ்டாலின் செய்கிறார்.

என் குழந்தை இந்தி படிக்கக் கூடாது எனக் கூறுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் நினைப்பது போல் தமிழகம் இப்போது இல்லை. தமிழகம் தற்போது ஆன்மீக பூமி. ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாகக் கூறும் தி.மு.க. இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதில்லையே ஏன் எனவும் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்