
சென்னை கோயம்பேட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர தடையை மீறி இரண்டாம் நாள் வெற்றிவேல் யாத்திரைக்கு புறப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், "வெற்றிவேல் யாத்திரையின் இரண்டாம் நாள் பயணம் திருவொற்றியூரில் இருந்து தொடங்க உள்ளோம். தமிழகத்தில் கோயில் இல்லாத இடங்களே இல்லை, கோயில் உள்ள இடங்களில் தான் வேல் யாத்திரை நடைபெறுகிறது" என்றார்.

இதனிடையே, வேல் யாத்திரையில் பங்கேற்க திருவொற்றியூர் புறப்பட்ட திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
'வேல் யாத்திரையில் பங்கேற்கக் கூடாது என வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். யாத்திரையில் பங்கேற்கச் செல்லும் பா.ஜ.க. தொண்டர்களை போலீசார் கைது செய்வது கண்டிக்கத்தக்கது' என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.