Tamilnadu BJP Annamalai spoke about vijaysethupathi's 800 film

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

Advertisment

முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அன்மையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியது.

Advertisment

இந்நிலையில் நேற்று பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.கவின் தமிழக துணைத்தலைவர் அண்ணாமலை, “கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான சினிமாவில் விஜய்சேதுபதி நடிப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. ஒரு கலைஞனுக்கு சினிமாவில் நடிக்க எல்லா உரிமையும் உள்ளது. விஜய்சேதுபதி நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை. அதில் அரசியலைக் கலப்பது சரியல்ல.” என்றார்.