ஜூன் 21- ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூடுகிறது!

tamilnadu assembly speaker pressmeet at chennai

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (09/06/2021) மாலை 06.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, "ஜூன் 21- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு தமிழக ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூடுகிறது.ஜூன் 21- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் உரையாற்றுவார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும். பேரவையில் பங்கேற்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படும்.

அனைத்து கட்சியினருக்கும் சம வாய்ப்பு அளித்து கூட்டம் நடக்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது ஜூன் 21- ஆம் தேதி அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரலை செய்வது பரிசீலனையில் உள்ளது" எனத் தெரிவித்தார்.

chief minister pressmeet speaker tn assembly
இதையும் படியுங்கள்
Subscribe