Advertisment

சபாநாயகராக அப்பாவு பொறுப்பேற்றார்!

fு

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராகராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பொறுப்பேற்றார். ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு, சட்டப்பேரவை பணியில் நீண்ட அனுபவம் பெற்றவர்.

Advertisment

கடந்த 1996ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும், 2001ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சையாகவும், 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பிலும் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். 2016ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற அப்பாவு, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதே ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தற்போது சபாநாயகராகதேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை சபாநாயகராகதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கு. பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

APPAVU speaker Tamilnadu assembly
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe