தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தில் சங்கராபுரம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தேசிய நெடுஞ்சாலை நடுவே அரளி பூச்செடி வளர்ப்பதால் எந்த பயனும் இல்லை என பேசினார். சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செலவம் தேசிய நெடுஞ்சாலைகளில், சாலையின் நடுவே அரளி பூச்செடிகள் வளர்ப்பதன் மூலம், சாலைத் தடுப்புக்கு மறுசாலையில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சமானது, எதிர்திசையில் செல்லும் வாகன ஓட்டிகளை பாதிக்காத வண்ணம் தடுக்கப்படும் என்றார்.
இது மட்டுமல்லாமல் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன்- டை ஆக்ஸைடை அரளி பூச்செடிகள் உள் வாங்கி கொண்டு அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடும் என்பதால் தான் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் கொடுத்தார்.