/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps ok124563_6.jpg)
சேலம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வுசெய்தார். அப்போது, அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைத் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப்பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, "கரோனா இறப்பைக் குறைத்துக் காட்டுகிறார்கள்; இறப்பு விவரத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும். கரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்சில் காத்திருந்து உயிரிழப்போர் உடலைக் கவரால் மூடி ஒப்படைக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டதால், கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும். முழு ஊரடங்கு அறிவித்ததால் நகர்ப்புறத்தில் இருந்த ஆறு லட்சம் பேர் கிராமப்புறங்களுக்கு வந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
கரோனா முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்காததால் இரண்டாவது அலை ஏற்பட்டதாக முதல்வர் கூறியதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "உலகளவில் எந்த நாட்டிலும் கரோனா முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. வல்லரசு நாடுகளிலும் கூட தற்போது வரை கரோனா தொற்று உள்ளது" என விளக்கம் அளித்தார்.
Follow Us