tamilnadu assembly mlas oath swearing

Advertisment

தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களில் 9 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத திமுகவைச் சேர்ந்த 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் என 9 பேர் பதவியேற்றுக்கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் 9 பேருக்கும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திமுகசார்பில் அமைச்சர்கள் சிவசங்கர், மதிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் காந்திராஜன், வரலட்சுமி, வெங்கடாசலம் ஆகியோர் பதவியேற்றனர். அதிமுகசார்பில் வைத்திலிங்கம், சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, கடம்பூர் ராஜு ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

Advertisment

tamilnadu assembly mlas oath swearing

கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த மே 11ஆம் தேதி பதவி ஏற்காத சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களில் திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா மட்டும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.