தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 06- ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக இன்று (08.01.2020) விவாதம் நடைபெற்றது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அப்போது சட்டப்பேரவையில் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "இளைஞர்கள் அரசு வேலைக்குஆசைப்படாமல் தொழில் முனைவோர்களாக முயற்சி செய்ய வேண்டும். மேலும் ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்பு தொழில் செய்தால் 10 மாதத்தில் ரூபாய் 1 லட்சம் வருமானம் ஈட்டலாம். மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது. மீன் அதிகம் சாப்பிட்டால் மாரடைப்பு, புற்றுநோய், கண் பார்வை கோளாறு உள்ளிட்டவை வராது." இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.