![]()
16 வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (11/05/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் நடக்கிறது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
தேர்தலில் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழைத் தவறாமல் கொண்டு வர சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டி நாளை (11/05/2021) மனுத்தாக்கல் செய்கின்றனர். இருவரும் போட்டியின்றி நாளை மறுநாள் (12/05/2021) காலை 10.00 மணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி இன்று (10/05/2021) பதவியேற்றுக் கொண்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us