/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/VOTER (1).jpg)
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (16/11/2020) காலை 11.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளை (15/11/2020) முதல் டிசம்பர் 15- ஆம் தேதி வரை வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் தொடர்பாக நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. ஜனவரி 5-க்குள் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு, ஜனவரி 20- ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)