Skip to main content

வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

tamilnadu assembly election polling date in april 6 all companies holidays

 

வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6-ல், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தமிழகத் தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

அந்த உத்தரவில், "தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல்- 6 ஆம் தேதி ஊதியத்துடன் தொழிலாளர்களுக்கு விடுமுறை தரவேண்டும். தினக்கூலி, தற்காலிகம், ஒப்பந்தம் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை தர வேண்டும். கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விடுமுறை தரவேண்டும். விடுமுறை நாள் ஊதியம் சாதாரணமாக ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்குத் தரப்படும் ஊதியமாக இருக்க வேண்டும். பணியின் தன்மைக்கேற்ப அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறையாமலும் இருக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான கட்டணம் பல மடங்கு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
 Airfare hiked manifold; Passengers are shocked
மாதிரிப்படம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என்று அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

வழக்கமான கட்டணத்தை விட 3  முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த வகையில் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 367 ரூபாயாக இருந்த விமான கட்டணம் பொங்கல் விடுமுறை காரணமாக 17 ஆயிரத்து 262 ரூபாயாக தற்போது உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 315 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 14 ஆயிரத்து 689 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 290 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 11 ஆயிரத்து 329 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 264 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 11 ஆயிரத்து 369 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.