Advertisment

"சட்டமன்ற தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்" -கமல்ஹாசன்

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு மக்கள் நீதிமய்யத்தில் இணைந்தார்.

Advertisment

கட்சியில் இணைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபுவை மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளராக நியமித்தார் கமல்ஹாசன்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் எனது சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்படுகிறது. அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா? சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும். ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ரஜினியும், நானும் சினிமாவில் இருந்தபோதே போட்டியாளர்கள் தான்; பொறாமை இல்லை." என்றார்.

Advertisment

'பாரத் நெட்' விவகாரத்தில் அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai PRESS MEET Kamal Haassan Makkal needhi maiam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe