வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர்! (படங்கள்)

தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், மேற்குவங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து, சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, சென்னைக்கு அருகே உள்ள மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் காவலர்களுடன் இணைந்துதீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன சோதனை வீடியோ பதிவுச் செய்யப்பட்டது.

Chennai flying squad team tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe